உள்ளூர் செய்திகள்

பல்லடத்தில் மாதர் சங்கம் சார்பில் பேரணி நடைபெற்ற போது எடுத்த படம்.

பல்லடத்தில் மாதர் சங்கம் சார்பில் பேரணி- பொதுக்கூட்டம்

Update: 2022-06-27 11:47 GMT
  • பல்லடத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க 16வது திருப்பூர் மாவட்ட மாநாடு நடைபெற்றது.
  • பல்லடத்தில் முக்கிய வீதிகளின் வழியாக சென்று கடைவீதி வந்தடைந்தது.

பல்லடம் :

பல்லடம் அனைத்திந்திய மாதர் சங்கம் சார்பில் பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற்றது. பல்லடத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க 16வது திருப்பூர் மாவட்ட மாநாடு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நேற்று ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்ட ஊர்வலம் பல்லடம் அரசு கல்லூரி முன்பிருந்து துவங்கி பல்லடத்தில் முக்கிய வீதிகளின் வழியாக சென்று கடைவீதி வந்தடைந்தது. பின்னர் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், மாநிலத் தலைவர் பொன்னுத்தாய், மாநில செயலாளர் பிரமிளா, திருப்பூர் மாவட்ட தலைவர் மைதிலி, மாநிலத் துணைத் தலைவர் சாவித்திரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News