உள்ளூர் செய்திகள்

போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள தரைகடைகள்.

சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்

Published On 2022-12-21 15:49 IST   |   Update On 2022-12-21 15:49:00 IST
  • பூக்கடை முன்பு நின்று பூஜை பொருட்களை வாங்கி செல்வதால் விபத்து.
  • தரை கடைகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மெலட்டூர்:

தஞ்சை மாவட்டம், திட்டையில் வசிஷ்டேஸ்வரர் கோயில் உள்ளது.

இந்த கோவிலின் அருகே உள்ள நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து சாலையோரம் சிலர் பூக்கடைகள் அமைத்து பூ வியாபாரம் செய்து வருகின்றனர்.

இதனால் இந்த சாலையில் செல்லும் ஏராளமான வாகனங்களுக்கும், கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு இது இடையூராக உள்ளது.

தார்சாலையின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து இந்த கடைகள் அமைக்கப் பட்டுள்ளன.

மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பூக்கடை முன்பு நின்று பூஜை பொருட்களை வாங்கி செல்வதால் விபத்துகளை சந்திக்கும் நிலை உள்ளது.

எனவே போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் அமைக்கப்பட்டுள்ள தரை கடைகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அரசுக்கும், நெடுஞ்சாலைதுறைக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News