உள்ளூர் செய்திகள்

பரமத்தி வேலூர் தாசில்தார் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம். 

பரமத்தி வேலூர் தாலுகா அலுவலகம் முன்பு பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்

Published On 2022-11-25 15:22 IST   |   Update On 2022-11-25 15:22:00 IST
  • புறம்போக்கு பகுதியில் குடியிருப்புக்கான நிலத்தை ஒதுக்கீடு செய்து தரக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பரமத்தி வேலூர் தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று உண்ணாவிரத போராட் டத்தில் ஈடுபட்டனர்.
  • சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் காமராஜ் நகர் மற்றும் சரளைமேடு பகுதியில் மாவட்ட நெடுஞ்சாலையின் இருபுறமும் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த பல ஆண்டாக வீடுகள் கட்டி வசித்து வந்தனர். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த ஒருவர், மாவட்ட நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள‌ வீடுகளை அகற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நீதிமன்ற உத்திரவின்படி ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட வீடுகள் இடித்து அகற்றப்பட்டது. பின்னர் அவர்களுக்கு திடுமல் கவுண்டம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள புறம்போக்கில் இடம் ஒதுக்குப்பட்டது. இந்நிலையில், அப்பகுதியில் போக்குவரத்து, மருத்துவம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை எனவும், ஜேடர்பாளையம் பகுதியில் உள்ள புறம்போக்கு பகுதியில் குடியிருப்புக்கான நிலத்தை ஒதுக்கீடு செய்து தரக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பரமத்தி வேலூர் தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று உண்ணாவிரத போராட் டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் பாதுகாப்பு

இதையடுத்து, பரமத்தி வேலூர் தாசில்தார் கலைச் செல்வி, ஜேடர்பாளையம் பகுதியில் உள்ள இடத்தை நேரில் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. மேலும் பாதுகாப்பு கருதி பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன், வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் ஆகியோர் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

Tags:    

Similar News