உள்ளூர் செய்திகள்

கட்டி முடிக்கப்பட்டு திறக்காமல் உள்ள உண்டு உறைவிட பள்ளி.

ரூ.12 கோடியில் கட்டப்பட்ட உண்டு உறைவிட பள்ளியை உடனடியாக திறக்க பொதுமக்கள் கோரிக்கை

Published On 2022-10-31 10:34 GMT   |   Update On 2022-10-31 10:34 GMT
  • பள்ளி வளாகம் முழுவதும் தற்போது செடி கொடிகள் வளர்ந்து புதர்போல் காணப்படுகிறது.
  • திறப்பு விழாவுக்காக காத்திருக்கும் பள்ளியை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கண்டிகை:

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே பட்டிபுலம் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் மழைக்கால பேரிடர் கட்டிடத்தில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் இருளர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளி இயங்கி வருகிறது.

இந்த பள்ளிக்கு நிரந்தர கட்டிடம் கட்டுவதற்கு அரசு முடிவு செய்து கண்டிகை அருகே உள்ள குமிழி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 15 ஏக்கர் பரப்பளவில் ரூ.12 கோடி மதிப்பில் இருளர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளி 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்கள் தங்கி பயிலும் வகையில் சகல வசதிகளுடன் கட்டப்பட்டது.

பள்ளி வளாகம் முழுவதும் தற்போது செடி கொடிகள் வளர்ந்து புதர்போல் காணப்படுகிறது. மேலும் பள்ளி வளாகத்தில் சாலை வசதிகள் இன்னும் அமைக்கப்படாமல் உள்ளது. திறப்பு விழாவுக்காக காத்திருக்கும் இந்த பள்ளியை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News