உள்ளூர் செய்திகள்
சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

நத்தம் அருகே பாதை அடைக்கப்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2022-11-18 11:09 IST   |   Update On 2022-11-18 11:09:00 IST
  • நல்லூர் மேற்குக் களத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குடியிருப்புக்கு தனியார் பட்டா நிலத்தின் வழியாக சென்று வந்துள்ள னர்.
  • பாதை அடைக்கப்பட்டதால் அரவங்குறிச்சியிலிருந்து கோட்டையூர் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

செந்துறை:

‌நத்தம் அருகே கோட்டை யூர் ஊராட்சிக்குட்பட்ட நல்லூர் மேற்குக் களத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குடியிருப்புக்கு தனியார் பட்டா நிலத்தின் வழியாக சென்று வந்துள்ள னர். நிலத்தின் உரிமையாளர் திடீரென்று தனது நில த்தினை அடைத்து விட்டார். எனவே குடியிருப்புகளுக்குச் செல்ல முடியாமல் தவித்தனர். எனவே பாதை அமைக்க வேண்டும் எனக்கோரி திடீரென அரவங்குறிச்சியிலிருந்து கோட்டையூர் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனியசாமி, கிராம நிர்வாக அலுவலர் முருகவேல் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட மக்க ளுடன் சமரசம் பேசினர். அப்போது நத்தம் தாலுகா தாசில்தாரிடம் இது குறித்து தீர்வு காண பேச்சு வார்த்தை யில் கலந்து கொண்டு முடிவெடுக்க கூறிய ஆலோ சனையை ஏற்று மறியலை கைவிட்ட னர்.

இதனால் சுமார் 1 மணி நேரம் கோட்டையூர் - அரவங்குறிச்சி வழியாக நத்தம் செல்லும் சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News