உள்ளூர் செய்திகள்

தென்காசி மாவட்டத்தில் 515 இருசக்கர மோட்டார் வாகனங்களுக்கான பொது ஏலம் தொடங்கியது

Published On 2023-02-14 08:28 GMT   |   Update On 2023-02-14 08:28 GMT
  • உரிமை கோரப்படாத நிலையில் இருந்து வந்த 515 இருசக்கர மோட்டார் வாகனங்கள், பொது ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
  • சுமார் 150 வாகனங்கள் முதல் நாளில் ஏலம் விடப்பட்டன.

தென்காசி:

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் உட்கோட்ட எல்கைக்குட்பட்ட பகுதிகளில் உரிமை கோரப்படாத நிலையில் இருந்து வந்த 515 இருசக்கர மோட்டார் வாகனங்கள், பொது ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி ஏலம் மூன்று நாட்கள் நடைபெறும். பொது ஏலமானது நேற்று காலை 10 மணி அளவில் ஆலங்குளம், வீர கேரளம் புதூர் தாசில்தார்கள் மற்றும் ஏ.டி.எஸ்.பி.தன்ராஜ் கணேஷ் தலைமையில் பாவூர்சத்திரத்தில் தொடங்கியது. இதில் முதல் நாளில் ஏற்கனவே வாகனங்களை நேரில், மேலும் தங்களின் பெயர், முகவரி அடங்கிய ஆதார் அட்டையுடன் ரூ.3 ஆயிரம் முன்பணம் செலுத்தி பதிவு செய்து டோக்கன் பெற்றுக் கொண்டவர்கள் வாகனத்தை ஏலம் எடுக்க கலந்து கொண்டனர்.

சுமார் 150 வாகனங்கள் முதல் நாளில் ஏலம் விடப்பட்டன. தொடர்ந்து இன்றும், நாளையும் வாகன ஏலம் நடைபெற உள்ளது.

Tags:    

Similar News