உள்ளூர் செய்திகள்

கடலூர் முதுநகர் ெரயில் நிலையத்தில் அதிகாரிகளிடம் பொது மக்கள் வாக்குவாதம்- பரபரப்பு

Published On 2022-11-01 15:11 IST   |   Update On 2022-11-01 15:11:00 IST
  • மயிலாடுதுறையில் இருந்து பயணிகள் விழுப்புரத்திற்கு டிக்கெட் பெற்றுக் கொண்டு வந்து கொண்டிருந்தனர்‌.
  • வருங்காலங்களில் இது போன்ற பாதிப்புகள் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்‌.

கடலூர்:

விழுப்புரம் பகுதியில் ெரயில்வே தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ெரயில்கள் இயங்காது என ெரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தனர். இன்று காலை மயிலாடுதுறையில் இருந்து பயணிகள் விழுப்புரத்திற்கு டிக்கெட் பெற்றுக் கொண்டு வந்து கொண்டிருந்தனர்‌. அப்போது கடலூர் முதுநகர் ெரயில் நிலையத்திலிருந்து ெரயில் செல்லாது என அதிகாரிகள் அறிவித்து ெரயிலில் இருந்த பயணிகளை உடனடியாக இறங்குமாறு அறிவுறுத்தினர். அப்போது இதனை கேட்ட ெரயில் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்து ெரயில்வே துறை அதிகாரியிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். அப்போது விழுப்புரம் பகுதியில் ெரயில்வே தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் விழுப்புரம் வரை ெரயில்கள் இயங்காது என தெரிவித்தனர்.

அப்போது பொதுமக்கள் கடும் கோபம் அடைந்து எதற்காக விழுப்புரம் வரை ெரயில் டிக்கெட் வழங்கீனர்கள்? இதற்கு யார் அனுமதி கொடுத்தார்கள்? என அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் இது சம்பந்தமாக ெரயில்வே துறை உயர் அதிகாரி களிடம் தெரிவித்து வருங்காலங்களில் இது போன்ற பாதிப்புகள் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்‌. தற்போது கடலூர் முதுநகரில் இருந்து அவர் அவர்கள் எடுத்த ெரயில் கட்டணத்தை மீதி தொகை வழங்கப்படும் என தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ரயில்வே துறை அதிகாரிகள் பொது மக்களுக்கு வழங்கக்கூடிய ரயில் கட்டணத்தை வழங்கினர். பின்னர் பொதுமக்கள் அவசர அவசரமாக கொட்டும் மழையில் நனைந்தபடி பஸ்சில் செல்வதற்கு ஓடினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News