உள்ளூர் செய்திகள்

ஓமலூரில் தூய்மை பணியாளர்களுக்கு ராஜேந்திரன் எம்.எல்.ஏ. நலத்திட்ட உதவிகள் வழங்கியபோது எடுத்த படம்.

தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Published On 2022-12-20 13:36 IST   |   Update On 2022-12-20 13:36:00 IST
  • தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
  • நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். நகர செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.

ஓமலூர்:

சேலம் மாவட்டம் ஓமலூர் கிழக்கு ஒன்றிய நகர தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். நகர செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.

மாவட்ட கவுன்சிலர்கள் சம்பு சண்முகம், அழகிரி, பேரூராட்சி தலைவர் செல்வராணி, துணை தலைவர் புஷ்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ கலந்துகொண்டு பேராசிரியர் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து தி.மு.க. கொடியேற்றி வைத்து, ஓமலூர் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதே போன்று ஓமலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியம் தலைமையில் ஓமலூர் அண்ணா நகரில் நடைபெற்ற விழாவில் ராஜேந்திரன் எம்.எல்.ஏ கலந்துகொண்டு பேராசிரியர் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, இனிப்புகள் வழங்கினார். இந்த விழாக்களில் மாவட்ட பொருளாளர் கார்த்திக்கேயன், துணை செயலாளர் திருநாவுக்கரசு, தலைமை பொதுக்குழு உறுப்பினர் குப்புசாமி, கன்னங்குறிச்சி பேரூராட்சி தலைவர் குபேந்திரன், விவசாய அணி அமைப்பாளர், பேரூராட்சி கவுன்சிலர்கள் வெங்கடேஷ், சசி, சுமித்ரா, சசிகலா மகேந்திரன், ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர்கள் தேன்மொழி தனசேகரன், செல்விராஜா, வடக்கு ஒன்றிய அவை தலைவர் ஜெயவேல், பொருளாளர் ரமேஷ், துணை தலைவர் சரளாதுரை, அழகேசன், மாவட்ட பிரதிநிதி ராஜ்நாராயணன், பிரேசில், ஆறுமுகம், செழியன், மொலாண்டிபட்டி மணி உட்பட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News