ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
- தாயன்பிற்கு ஈடாக அன்பு காட்டி மனிதநேயத்தை வளர்த்து அதன்வழி ஆக்கப்பூர்வமான காரியங்களை செயல்படுத்த வேண்டும்.
- பல்வேறு சமூக நலப்பணிகளிலும் ஜோதி அறக்கட்டளை தொடர்ந்து ஈடுபட்டு வருவது பாராட்டுக்குரியது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாநகரத்திற்குட்பட்ட ஏழை, எளிய அன்றாட கூலி தொழில் செய்து வரும் மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையிலும், வருமானம் இல்லாமல் முடங்கி கிடக்கும் மக்களுக்கு உதவி செய்யும் வகையிலும் தேர்வு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு ஜோதி அறக்கட்டளை சார்பில் விலையில்லா அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள ஜோதி அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தஞ்சை நகர போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:- மனிதனிடம் இருக்கும் பல்வேறு ஆக்கப்பூர்வான எண்ணங்கள் சொல் வடிவம் பெறாமல் போவதற்கு அவர்களுக்கு அன்பும், ஆதரவும், அரவணைப்பும் கிடைக்காமல் போனதே காரணம். இந்த நிலை இருக்க கூடாது.
தாயன்பிற்கு ஈடாக அன்பு காட்டி மனிதநேயத்தை வளர்த்து அதன்வழி ஆக்கப்பூர்வமான காரியங்களை செயல்படுத்த வேண்டும் என்றார். மேலும், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, ஆதரவற்றோர் மற்றும் முதியோர் நலத்திட்ட உதவிகள் வழங்குவது போன்ற பல்வேறு சமூக நலப்பணிகளிலும் ஜோதி அறக்கட்டளை தொடர்ந்து ஈடுபட்டு வருவது பாராட்டுக்குரியது என தெரிவித்தார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர். பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி ஆகியோர் செய்திருந்தனர்.