உள்ளூர் செய்திகள்

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார்.

சுதந்திர தினவிழாவில் 85 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Published On 2023-08-15 15:47 IST   |   Update On 2023-08-15 15:47:00 IST
  • சிறப்பாக பணிபுரிந்து மாவட்ட நிர்வாகத்திற்கு பெருமை சேர்த்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள்.
  • பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

தஞ்சாவூர்:

தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் 76-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவில் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கி தேசியக்கொடி ஏற்றி வைத்து, மூவர்ண பலூன்களை பறக்க விட்டார். தொடர்ந்து, கலெக்டர் தீபக் ஜேக்கப், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் ஆகியோர் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டனர்.

முன்னதாக சுதந்திர போராட்ட தியாகிகளை கலெக்டர் தீபக் ஜேக்கப் கவுரவித்தார். தொடர்ந்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

மேலும், பல்வேறு திட்ட பணியில் சிறப்பாக பணிபுரிந்து மாவட்ட நிர்வாகத்திற்கு பெருமை சேர்த்த 125 பேருக்கு கலெக்டர் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.

மேலும், போர், போரை ஒத்த நடவடிக்கையில் உயிரிழந்த மற்றும் ஊனமுற்ற படைவீரர்களுக்கான வருடாந்திர குடும்ப பராமரிப்பு மானியமாக 15 பேருக்கு ரூ.3 லட்சம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மின்கல இயங்கு வாகனம் ரூ.4.24 லட்சம் மதிப்பில் 4 பயனாளிகளுக்கும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மாவட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் பங்கு பெற்று முதல் பரிசு மற்றும் 2-ம் பரிசு பெறும் பயனாளிகள் 4 பேருக்கு ரூ.40 ஆயிரம், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் ரூ.4.11 லட்சம் மதிப்பில் 5 பயனாளிகளுக்கும், தாட்கோ மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் ரூ. 1.01 கோடி மதிப்பில் 57 பயனாளிகளுக்கு என மொத்தம் 85 பயனாளிகளுக்கு ரூ.1.13 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார்.

பின்னர், பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

முடிவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், ஐ.ஜி. ஜெயச்சந்திரன், ஏ.டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன், கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், கோட்டாட்சியர், தாசில்தார், இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News