உள்ளூர் செய்திகள்

பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி எதிர்புறம் உள்ள காந்திமதி அம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-1 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டம் தொடக்கம்

Published On 2022-08-02 10:05 GMT   |   Update On 2022-08-02 10:05 GMT
  • மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.
  • நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-1 மாணவ, மாணவி களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.

நெல்லை:

தமிழகம் முழுவதும் பிளஸ்-1 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார்.

இதன்தொடர்ச்சியாக நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-1 மாணவ, மாணவி களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.

இதற்கான விழா பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி எதிர்புறம் உள்ள காந்திமதி அம்பாள் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

விழாவில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு 110 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் களை வழங்கினார். மாவட்ட கலெக்டர் விஷ்ணு, அப்துல் வகாப் எம்.எல்.ஏ, மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், மாவட்ட வருவாய் அதிகாரி ஜெயஸ்ரீ, ஆர்.டி.ஓ. சந்திரசேகர், நெல்லை கல்வி மாவட்ட அலுவலர் வசந்தா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் டைட்டஸ், அமலா, முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், பள்ளி தலைமை ஆசிரியை வத்சலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை மாவட்டத்தில் 7,662 மாணவர்கள், 9,321 மாணவிகள் என மொத்தம் 16,983 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளது.

Tags:    

Similar News