உள்ளூர் செய்திகள்

தருமபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு சத்துணவு பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

சத்துணவு பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

Published On 2023-09-12 15:45 IST   |   Update On 2023-09-12 15:45:00 IST
  • ஊதியத்துடன் குடும்பநல ஓய்வு ஊதியம் வழங்க வெண்டும்
  • மாவட்ட தலைவர் கணேசன் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.

தருமபுரி 

தருமபுரியில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு பணியாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு கடந்த சட்டமன்ற தேர்தலில் போது கொடுத்த வாக்குறுதின்படி சத்துணவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், காலை சிற்றுண்டி திட்டத்தை பள்ளி சத்துணவு பணியாளர்களிடம் வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு அடிப்படை ஊதியத்துடன் குடும்பநல ஓய்வு ஊதியம் வழங்க வெண்டும்,

உணவூட்டும் செலவீனங்களை விலைவாசிக்கு ஏற்றவாறு வழங்க வேண்டும், ஓய்வு பெற்றுகின்ற சத்துணவு அமைப்பாளர்களுக்கு 5 லட்சமாகவும், சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு 3 லட்சமாகவும் உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் எம்.ஜி.ஆர்.சத்துணவு பணியாளர்கள் சங்கம் மாவட்ட தலைவர் கணேசன் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்பாட்டத்தில் மாநில தலைவர் ராஜேந்திரன், மாநில பொது செயலாளர் சிவாஜி மற்றும் மாநில, மாவட்ட பொருப்பாளர்கள் உள்ளிட்ட 2 ஆயிரத்துக்கும் மெற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News