உள்ளூர் செய்திகள்

டி.பி.வி. வைகுண்டராஜா.


டி.பி.வி. வைகுண்டராஜா.


நாளை கடைகளை அடைத்து போராட்டம்; அரிசிக்கு விதித்த 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை திரும்ப பெற வேண்டும்-மத்திய அரசுக்கு ஆலங்குளம் வட்டார தலைவர் வேண்டுகோள்

Published On 2022-07-15 15:08 IST   |   Update On 2022-07-15 15:08:00 IST
  • மத்திய அரசு வரியை ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் நாளை அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் சார்பாக வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளனர்.
  • வரியின் மூலம் அரிசியின் விலையானது உயர வாய்ப்பு உள்ளது.

ஆலங்குளம்:

அரிசிக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் நாளை அரிசி கடைகள் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆலங்குளம் வட்டார அரிசி ஆலை அதிபர்கள் சங்க தலைவர் டி.பி.வி. வைகுண்டராஜா கூறிய தாவது:-

நமது நாட்டை பொறுத்தவரை ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இன்றி அனைத்து தரப்பு மக்களும் அன்றாட உணவில் அரிசி மற்றும் கோதுமையை பயன்படுத்தி வருகிறார்கள்.இந்த இரண்டு உணவு பொருட்களும் மக்களுக்கு தரமான தாகவும், சுத்தம் மற்றும் சுகாதாரமானதாகவும் கிடைக்கவேண்டும் என்பதற்காக இந்தியஅரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.


இந்த கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் மத்திய அரசு இப்போது பேக்கிங் செய்யப்பட்டுள்ள உணவு பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதித்து இருப்பது ஏற்புடையதாக இல்லை. இந்த வரியின் மூலம் அரிசியின் விலையானது உயர வாய்ப்பு உள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

எனவே மத்திய அரசு இந்த வரியை ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் நாளை அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் சார்பாக வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளனர்.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் அனைத்து அரிசி ஆலைகளும் பங்கேற்று ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் நாளை நடக்க விருக்கும் வேலை நிறுத்தத்தின் மூலம் மத்திய அரசு கண்டுகொள்ள வில்லை என்றால் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடு வோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News