உள்ளூர் செய்திகள்
சிமெண்ட் சாலை அமைக்க மாவட்ட ஊராட்சி தலைவர் தமிழ்செல்வி போஸ் அடிக்கல் நாட்டியபோது எடுத்தபடம்.
ஆலங்குளம் அருகே கடங்கநேரி ஊராட்சியில் ரூ.27.88 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகள்
- கடங்கநேரியில் சிமெண்ட் சாலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
- சிறு பாலம்,சிமெண்ட் சாலைகளையும் தமிழ்செல்வி போஸ் திறந்து வைத்தார்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே உள்ள கடங்கநேரியில் ரூ.13.93 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்க மாவட்ட ஊராட்சி தலைவர் தமிழ்செல்வி போஸ் அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து அவர், வெங்கடேஸ்வரபுரம் என்ற ரெட்டியார்பட்டியில் ரூ.13.95 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சிறு பாலம் மற்றும் 2 சிமெண்ட் சாலைகளையும் அவர் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் ஆலங்குளம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்லத்துரை, தலைமை பொதுக்குழு உறுப்பினர் சமுத்திர பாண்டியன், கடங்கநேரி ஊராட்சி தலைவர் அமுதா, தேன்ராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மணிமாறன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் அசோக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.