உள்ளூர் செய்திகள்

நிலக்கடலையில் அதிக மகசூல் பெற கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்

Published On 2022-12-02 09:46 GMT   |   Update On 2022-12-02 09:46 GMT
  • நாமக்கல் மாவட்டத்தில் நிலக்கடலை மானாவாரி பயிராகவும், இறவை பயிராகவும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் நிலக்கடலையில் அதிக மகசூல் பெறுவதற்கு ஊட்டச்சத்து கரைசலை தெளிக்க வேண்டும்.
  • 200 லிட்டர் தண்ணீரில் கலந்து அதிகாலையிலோ அல்லது மாலை வேளையிலோ, நிலக்கடலை பயிர் விதைத்த 30-ம் நாள் மற்றும் 45-ம் நாள் என 2 முறை பயிர்களின் இலையின் மீது நன்கு படும்படி தெளிக்க வேண்டும்.

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை மற்றும் பரமத்தி வட்டாரத்தில் நிலக்கடலையில் அதிக மகசூல் பெற கடைபிடிக்க வேண்டியது முறை குறித்து வேளாண்மை உதவி இயக்குனர்கள் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் நிலக்கடலை மானாவாரி பயிராகவும், இறவை பயிராகவும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் நிலக்கடலையில் அதிக மகசூல் பெறுவதற்கு ஊட்டச்சத்து கரைசலை தெளிக்க வேண்டும். இந்த ஊட்டச்சத்து கரைசல் தயாரிப்பதற்கு டி.ஏ.பி உரம் ஒரு கிலோ, அம்மோனியம் சல்பேட் உரம் 500 கிராம், போராக்ஸ் 200 கிலோ ஆகியவற்றை சிறிதளவு நீரில் தனித்தனியே ஊறவைத்து, கரைத்து வடிகட்டி தெளிந்த கரைசலை எடுத்துக் கொள்ள வேண்டும். வடிகட்டிய கரைசலில் 140 மில்லி பிளானோ-பிக்ஸ் பயிர் ஊக்கியை கலந்து கொண்டு அக்கலவையை ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து அதிகாலையிலோ அல்லது மாலை வேளையிலோ, நிலக்கடலை பயிர் விதைத்த 30-ம் நாள் மற்றும் 45-ம் நாள் என 2 முறை பயிர்களின் இலையின் மீது நன்கு படும்படி தெளிக்க வேண்டும்.

ஊட்டச்சத்து கரை சலை நிலக்கடலை பயிரில் தெளிப்பதால் இலை துவாரங்களின் வழி யாக ஊட்டச்சத்துகள் நேரடி யாக பயிருக்கு சென்று அடைகின்றன. இதனால் நிலக்கடலை பயிர் சீராக வளர்ச்சி அடைந்து பூக்கள், பிஞ்சுகள் அதிகள

வில் பிடிப்பதற்கு உதவி புரிகின்றது.

எனவே நிலக்கடலை விதைப்பண்ணை விவசாயிகள் மேற்கண்ட தொழில்நுட்பத்தை கடைப்பிடித்து அதிக விதை நிலக்கடலையினை அறுவடை செய்து அதிக வருமானம் பெற்று பயன் பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News