விழாவில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் தங்கமணி .
மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா
- குலாலர் சங்கம் ஆகியவை சார்பில், கல்வியில் சிறந்த மாணவ, மாணவியர்களுக்கு பரிசளிப்பு விழா குமாரபாளையம் லஷ்மி மகாலில் மாவட்ட தலைவர் சிங்காரவேல் தலைமையில் நடைபெற்றது.
- நிகழ்ச்சிக்கு பிறகு முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசுகையில், குலாலர் சமுதாயத்தினர் பொங்கல் பானை, கார்த்திகை தீப விளக்குகள் உள்ளிட்டவை தயாரிக்கின்றனர்.
குமாரபாளையம்:
தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கம், நாமக்கல் மாவட்ட குலாலர் சங்கம் ஆகியவை சார்பில், கல்வியில் சிறந்த மாணவ, மாணவியர்களுக்கு பரிசளிப்பு விழா குமாரபாளையம் லஷ்மி மகாலில் மாவட்ட தலைவர் சிங்காரவேல் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளர்களாக மாநில தலைவர் நாராயணன் பங்கேற்று வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் தங்கமணி எம்.எல்.ஏ., திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில், குமாரபாளையம் நகராட்சி தலைவர் விஜய் கண்ணன், திமுக நகர செயலாளர் செல்வம், அதிமுக நகர செயலாளர் பாலசுப்ரமணி , முன்னாள் நகர செயலாளர் குமணன் உள்ளிட்ட பலர் பங்கேற்று வாழ்த்தி பேசி மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.
நிகழ்ச்சிக்கு பிறகு முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசுகையில், குலாலர் சமுதாயத்தினர் பொங்கல் பானை, கார்த்திகை தீப விளக்குகள் உள்ளிட்டவை தயாரிக்கின்றனர். அவர்களின் வாழ்க்கை திருவிழா காலங்களுடன் பிணைந்து உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விவசாயிகள் நலன் காக்க கரும்பு கொள்முதல் செய்து ரேசன் கடைகளில் வழங்க வேண்டும் என்றார்.