தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: பொதுமக்கள், வேலைதேடுபவர்கள் அறிந்து கொள்ள விழிப்புணர்வு வாகனம்
- மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சரயு தலைமை தாங்கினார்.
- பல்வேறு கோரி க்கைகள் குறித்த மனுக்களை பெற்று ெகாண்ட கலெக்டர், தகுதியான மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சரயு தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், பொது மக்களிடம் வீட்டுமனைப் பட்டா, விலையில்லா தையல் எந்திரம், சலவை பெட்டி, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி மற்றும் மின் இணைப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்களை பெற்று ெகாண்ட கலெக்டர், தகுதியான மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தகுதியில்லாத மனுக்க ளுக்கு உரிய விளக்கத்தினை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
முன்னதாக, முன்னாள் முதல்-அமைச்சர் கருணா நிதியின் நூற்றாண்டு விழா வினையொட்டி கிருஷ் ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வருகிற 26-ந் தேதியன்று மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையம் இணைந்து நடத்தும், 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்குபெறும், மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு நடை பெறுவதை பொதுமக்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் அறிந்து கொள்ள ஏதுவாக விழிப் புணர்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பன்னீர் செல்வம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அலுவலர் பத்மலதா, மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை அலு வலர் ரமேஷ்குமார், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் மற்றும் துறை சார்ந்த அலு வலர்கள் கலந்து கொண்டனர்.