சாலையோர பள்ளத்தில் இறங்கி நின்ற தனியார் பஸ்.
திட்டக்குடி அருகே தனியார் பஸ் பள்ளத்தில் இறங்கியது: பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
- சிதம்பரத்தில் இருந்து பெரம்பலூர் நோக்கி தனியார் பஸ் 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி கொண்டு வந்தது.
- ஆவினங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பயணிகளை மாற்று பஸ்சில் அனுப்பி வைத்தனர்.
கடலூர்:
சிதம்பரத்தில் இருந்து பெரம்பலூர் நோக்கி தனியார் பஸ் 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி கொண்டு வந்தது. திட்டக்குடியை அடுத்துள்ள ஆவினங்குடி அருகே வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் திடீரென சாலையின் குறுக்கே திரும்பினர். இதனால் அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதாமல் இருக்க வலது புறம் திருப்பினார். இதில் சாலையோர பள்ளத்தில் பஸ் இறங்கி நின்றது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 40-க்கும் மேற்பட்டோர் சிறுகாயமின்றி அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.
இது குறித்து தகவல் அறிந்த ஆவினங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பயணிகளை மாற்று பஸ்சில் அனுப்பி வைத்தனர். பள்ளத்தில் இறங்கிய தனியார் பஸ் பொக்லின் எந்திரம் மூலம் மீட்கப்பட்டது. இதனால் திட்டக்குடி- விருத்தாசலம் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.