உள்ளூர் செய்திகள்

நாமக்கல்லில் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்

Published On 2022-07-08 09:59 GMT   |   Update On 2022-07-08 09:59 GMT
  • பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் (அப்ரண்டீஸ்) சேர்க்கை முகாம் வருகிற 11-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
  • முகாமில் நேரடியாக பங்கேற்று தொழிற்பழகுநர்களை தேர்வு செய்து பயன்பெறலாம்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளி–யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தேசிய தொழிற்பழகுநர் ஊக்குவிப்புத் திட்டம் மற்றும் தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக, நாமக்கல் மாவட்ட அளவில் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் (அப்ரண்டீஸ்) சேர்க்கை முகாம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் நாமக்கல் வளாகத்தில் வருகிற 11-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

அரசு, தனியார் தொழிற்– பயிற்சி நிலை–யங்க–ளில் ஐ.டி.ஐ பயின்று வெற்றிகரமாக பயிற்சியினை நிறைவு செய்து இதுநாள் வரை தொழிற்–பழகுநர் பயிற்சியினை மேற்கொள்ளாத பயிற்சியா–ளர்கள் மற்றும் பட்டய படிப்பு , பொறியியல் படிப்பு, பட்டப் படிப்பு பயின்ற–வர்கள் தங்களது கல்வி சான்றிதழ், சாதி சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு போட்டோ –-2 , ஆதார் அட்டை, தேசிய, மாநில தொழிற் சான்றிதழ் (COE தொழிற்பிரிவு சான்றிதழ்கள் உட்பட) ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாமில் பங்கேற்று தொழிற்பழகுநர்களாக சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தொழிற்பழகுநர் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தொழிற்–நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தில் காலியாக உள்ள தொழிற்பழகு–நர்களின் எண்ணிக்கையை நிறைவு செய்திடும் பொருட்டு உரிய நிறுவன பதாகைகளுடன் இம்முகாமில் நேரடியாக பங்கேற்று தொழிற்பழகு நர்களை தேர்வு செய்து பயன்பெறலாம்.

மேலும் விபரங்களை அறியும் பொருட்டு நாமக்கல் மாவட்டம் பெரியப்பட்டி அஞ்சல் கொண்டி–செட்டிப்பட்டியில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் உதவி இயக்குநரை நேரிலும் மற்றும் தொலைபேசி 04286 - 290297 வாயிலாகவும் தொடர்பு கொண்டு அறிந்துக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News