உள்ளூர் செய்திகள்

பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ள சாமந்தி பூக்களை படத்தில் காணலாம்.

தருமபுரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி வரத்து அதிகரிப்பால் பூக்களின் விலை கடும் சரிவு சாமந்தி கிலோ ரூ.20-க்கு விற்பனை-விவசாயிகள் அதிர்ச்சி

Published On 2023-09-17 15:55 IST   |   Update On 2023-09-17 15:55:00 IST
  • விவசாயிகள் தங்கள் விவசாய விளைநிலங்களில் விளை வித்த பூக்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
  • ஏராளமானோர் பூஜைக்காக பூக்கள் வாங்கி செல்ல மார்க்கெட்டுக்கு இன்று காலை முதலே வாங்கி செல்கின்றனர்.

தருமபுரி,

தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் பூக்கள் சந்தை செயல்பட்டு வருகிறது, இச்சந்தைக்கு பென்னாகரம், பாலக்கோடு, தொப்பூர், நல்லம்பள்ளி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதி களிலிருந்தும் ஏராளமான விவசாயிகள் தங்கள் விவசாய விளைநிலங்களில் விளை வித்த பூக்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்,

இந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி நாளை வரவுள்ள நிலையில் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பல்வேறு வகையான பூக்களின் வரத்து அதிகரித்தது. இதனால் விலை சரிந்துள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு ஏராளமானோர் பூஜைக்காக பூக்கள் வாங்கி செல்ல மார்க்கெட்டுக்கு இன்று காலை முதலே வாங்கி செல்கின்றனர்.

இன்றைய நிலவரப்படி சாமந்தி பூ கிலோ 20 ரூபாய்க்கும், சம்பங்கி 140 ரூபாய்க்கும், பன்னீர் ரோஸ் 120 ரூபாய்க்கும், அரளி பூ 150 ரூபாய்க்கும், செண்டு மல்லி 30 ரூபாய்க்கும், குண்டுமல்லி 200 ரூபாய்க்கும், கோழி கொண்டை 30 ரூபாய்க்கும் சன்னமல்லி 200 ரூபாய்க்கும், பட்டன் ரோஸ் 200 ரூபாய்க்கும் விற்பனை யானது.

மேலும் இன்று மார்க் கெட்டுக்கு பூக்களின் வரத்து அதிகரிப்பால் கடந்த இரு தினங்களை விட தற்போது பூக்களின் விலை இரு மடங்கு குறைந்து விற்பனையாகி வருகிறது. தற்போது விற்பனையாகி வரும் விலையை விட நாளை மேலும் விலை குறையலாம் என எதிர்பார்க்கபடுகிறது, விலை குறைவால் பொதுமக்களை மகிழ்ச்சிய டைந்தாலும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News