நிகழ்ச்சி ஏற்பாடுகளை செந்தில்குமார் எம்.எல்.ஏ பார்வையிட்டார்.
கொடைரோடு அருகே உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் தீவிரம்
- உதயநிதி ஸ்டாலின் வரும் 23-ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்து, நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
- இதற்கான ஏற்பாடுகள் நடைபெறும் இடங்களை, திண்டுக்கல் (கிழக்கு) மாவட்ட செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ., பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கொடைரோடு:
தி.மு.க இளைஞரணி செயலாளரும், இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வரும் 23-ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்து, நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். மேலும் விழா கின்னஸ் சாதனைக்காக 6 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கின்றார்.
விழா ஏற்பாடுகளை அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்ட இளைஞரணி சார்பில் நடைபெற உள்ள எளியோர் எழுச்சி நாள் விழா மற்றும் அன்பழகன் நூற்றாண்டு விழா கொடியேற்று நிகழ்ச்சிகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார். இதனை அடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் 50அடி உயர கொடிக்கம்பத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க கொடியினை ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
இதற்கான ஏற்பாடுகள் நடைபெறும் இடங்களை, திண்டுக்கல் (கிழக்கு) மாவட்ட செயலாளர்செந்தில்குமார் எம்.எல்.ஏ., பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து கொடைரோடு சுங்கசாவடி அருகே 50 அடி உயரம் கொண்ட தி.மு.க கொடி ஏற்றுதல், வரவேற்பு நிகழ்ச்சி 22-ந்தேதி நடைபெறுகிறது. அந்த இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவர் அங்கிருந்த நிர்வாகிகளுடன் விழா நடப்பது குறித்து ஆலோசனையும் மேற்கொண்டார்.