சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த நந்தியம்பெருமான்.
சீர்காழி பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
- நந்திக்கு பால், பன்னீர், விபூதி உள்ளிட்ட திரவிய பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
- சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருப்புன்கூ ரில் நந்தனார் வழிபட நந்தி விலகிய சிவலோக நாதனார் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் சவுந்தர நாயகி உடனாகிய சிவலோகநா தர்சுவாமி அருள்பாலிக்கிறார்.
இக் கோயிலில் தஞ்சைக்கு அடுத்தபடியாக பெரிய நந்தி உள்ளது. பிரதோஷம் தோறும் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.
அதன்படி வியாழக்கிழமை பிரதோஷத்தையொட்டி நந்திக்கு, பால், பன்னீர், விபூதி ,பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களும் காட்சியளித்தார்.
தொடர்ந்து தீபாரணை காட்டப்பட்டு அன்னதானம் வழங்கப்ப ட்டது. இதே போல் சீர்காழி சட்டைநாதர்சுவாமி கோவில், தென்பாதி கைவிடலப்பர்சு வாமி கோவில், சீர்காழி தாளபுரீஸ்வரர்கோவில், நாகேஸ்வர முடையார் கோவில் உள்ளிட்ட கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.