உள்ளூர் செய்திகள்

தம்மணம்பட்டி கிராமத்தில் யோகா பயிற்சி

Published On 2023-02-27 09:49 GMT   |   Update On 2023-02-27 09:49 GMT
  • மனவளக்கலை மன்றத்தின் சார்பில் பிரம்ம ஞான யோகா பயிற்சி நடைபெற்றது.
  • மனதை ஒருநிலைப்படுத்துதல் உடல்நிலையில் நோய் நொடியின்றி வாழவும் யோகாவானது உதவுகிறது.

தொப்பூர்,

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே தம்மணம்பட்டி கிராமத்தில் சிவன் கோவில் மடத்தில் பாரதிபுரம் வாழ்க வளமுடன் மனவளக்கலை மன்றத்தின் சார்பில் பிரம்ம ஞான யோகா பயிற்சி நடைபெற்றது.

இந்த பயிற்சியின் மூலம் மன அமைதி மனதை ஒருநிலைப்படுத்துதல் உடல்நிலையில் நோய் நொடியின்றி வாழவும் யோகாவானது உதவுகிறது. தம்மணம்பட்டி கிராமத்தில் வசித்து தற்போது சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் சிங்கப்பூர் ராமசாமி என்பவர் இந்த கிராமத்தில் வாழ்க வளமுடன் மனவளக்கலை யோகா பயிற்சி மையம் அமைக்க வேண்டும் என்று சொல்லி தன்னுடைய சொந்த பணத்தை ரூபாய் 3 லட்சத்து ஐம்பதாயிரம் வழங்கி உள்ளார்.

ஆகையால் இந்த கிராமத்தில் யோகா பயிற்சி மையமானது அமைக்கப்பட்டு கிராம மக்கள் அமைதியுடன் நோய்நொடி இல்லாமல் வாழ வேண்டும் என இந்த நிதியை அளித்துள்ளார். மேலும் இந்த யோக பயிற்சியில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு தியானம் செய்தனர். அதனை தொடர்ந்து யோகா பயிற்சியை பாரதிபுரம் வாழ்க வளமுடன் தலைவர் மாதலிங்கம் முன்னிலையில் நடைபெற்றது.

பேராசிரியர் அய்யாதுரை, பூங்கொடி, சுமதி, சிவலிங்கம், சாந்தா, ராணி, மல்லிகா, செந்தில்குமார் ஆகியோர் யோகா பயிற்சியில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News