உள்ளூர் செய்திகள்

சூளகிரியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

Published On 2023-02-08 15:33 IST   |   Update On 2023-02-08 15:33:00 IST
  • சூளகிரி, காமன்தொட்டி துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.
  • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மின்சார வாரிய செயற்பொறியாளர் முத்துசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சூளகிரி, காமன்தொட்டி துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. எனவே அங்கிருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்படும் சூளகிரி நகரம், உலகம், மாதரசனப்பள்ளி, ஏனுசோனை, சின்னார், சுண்டகிரி, சாமல்பள்ளம், பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, காளிங்கவரம், சிம்பில்திராடி, காமன்தொட்டி, கோனேரிப்பள்ளி, பாத்தகொட்டாய், எர்ரண்டப்பள்ளி, பேட ப்பள்ளி, சென்னப்பள்ளி, மேடுப்பள்ளி, செம்பரசனப்பள்ளி, போடூர், திருமலைகோட்டா, அட்டகுறுக்கி, கோபசந்திரம், தியாரசனப்பள்ளி, ஏ.செட்டிப்பள்ளி, பங்காநத்தம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களுக்கு காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News