உள்ளூர் செய்திகள்
- அர்பன் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
கும்பகோணம்:
மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பிரகாஷ் வெளி யிட்டுள்ள செய்திகு றிப்பில் கூறியிருப்பதாவது :-
கும்பகோணம் அர்பன் துணை மின்நிலையத்தில் வருகிற 15-ம் தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது.
எனவே கும்பகோணம் நகர் முழுவதும் மற்றும் கொரநாட்டு கருப்பூர், செட்டிமண்டபம், மேலகாவேரி பகுதிகளில் 15-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.