உள்ளூர் செய்திகள்

கனமழை காரணமாக பண்ருட்டி ராஜாஜி சாலையில் போக்குவரத்து குறைந்து காணப்பட்டது.

பண்ருட்டியில் கொட்டி தீர்த்த கன மழை

Published On 2022-08-29 08:26 GMT   |   Update On 2022-08-29 08:26 GMT
  • பண்ருட்டியில் நேற்று மாலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
  • திடீர் மழையால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

கடலூர்:

பண்ருட்டியில் நேற்று மாலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது திடீரென இடி, மின்னல், சூறைகாற்றுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் சாலைகளில்மழைநீர் வெள்ளநீராக பெருக் கெடுத்து ஓடியது. நகரின் முக்கிய தெருக்கள், எல்.என்.புரம் உள்ளிட்டபகுதிகளில் மின்தடை செய்யப்பட்டது.பலகிரா மங்கள் இருளில்மூழ்கியது. திடீர் மழையால் வாகன ஓட்டி கள் கடும் அவதிக்கு ள்ளா கினர்.வாகனங்க ளில்முகப்பு விளக்கை எரியவி ட்டபடி ஊர்ந்து சென்றனர். தெருக்கள் சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கி இருந்தது பண்ருட்டி சென்னை சாலை, பண்ருட்டி கும்பகோ ணம் சாலை குளம் போல காட்சியளித்தது. சாலை களில் குண்டும் குழியுமான பள்ளங்களில் வாகன ஓட்டிகள் விழுந்து எழுந்து செல்லும் காட்சி பரிதாபமாக இருந்தது.

Tags:    

Similar News