உள்ளூர் செய்திகள்

ஊட்டி தலைமை அஞ்சலகத்தில் தபால் ஸ்டாம்ப் கண்காட்சியகம்

Published On 2023-09-09 09:18 GMT   |   Update On 2023-09-09 09:18 GMT
  • 30 தலைப்புகளில் தபால் ஸ்டாம்ப் சட்டகங்கள் இடம்பெற்று உள்ளன
  • பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள், தபால் தலை கண்காட்சியகத்தை சுற்றிப்பார்த்து மகிழ்ந்தனர்

ஊட்டி,

ஊட்டி தலைமை தபால் அலுவலகத்தில் இளையதலைமுறையினரிடம் அஞ்சல் தலையின் முக்கியத்துவத்தை அறிமுகப்படுத்தும் வகையில் தபால் ஸ்டாம்ப் தொகுப்பு கண்காட்சியகம் அமைக்கப்பட்டு உள்ளது.

இங்கு தாவரங்கள், விலங்குகள், இயற்கை பாதுகாப்பு, ரெயில்வே வரலாறு, சுதந்திர போராட்ட வீரர்கள், புவியியல் குறியீடு ஆகிய தலைப்புகளில் 30 தபால் ஸ்டாம்ப் சட்டகங்கள் இடம்பெற்று உள்ளன.

மேலும் சுற்றுலா பயணிகள் மற்றும் இளம்தலைமுறையினரை ஈர்க்கும் வகையில் பல்வேறு நினைவு பொருட்கள், தபால்தலை விற்கும் கவுன்டர், மை ஸ்டாம்ப் விற்பனை கவுன்டர் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.

ஊட்டி தலைமை தபால் அலுவலகத்தில் அஞ்சல் ஸ்டாம்ப் தொகுப்பு கண் காட்சியகத்தை தமிழ்நாடு வட்ட தபால்துறை தலைவர் சாருகேசி தொடங்கி வைத்தார்.

கோவை ஆர்.எம்.எஸ். முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் அகில் நாயர், ஊட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் இந்திரா, மேற்கு மண்ட தபால்துறை உதவி இயக்குநர் கமலேஷ், கோவை தலைமை அஞ்சலக முதுநிலை அதிகாரி ஜெயராஜ்பாபு உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் தபால்துறை சார்பில் வினாடி-வினா போட்டி, கடிதம் எழுதுதல் மற்றும் ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் தபால் ஸ்டாம்புகளை காட்சிப்படுத்திய சேகரிப்பாளர்களும் கவுரவிக்கப்பட்டனர். தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள், தபால் தலை கண்காட்சியகத்தை நேரடியாக சுற்றிப்பார்த்து ரசித்து மகிழ்ந்தனர்.

ஊட்டி தலைமை தபால் அலுவலகத்தில் அஞ்சல் ஸ்டாம்ப் தொகுப்பு கண்காட்சியகம் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை திறந்தி ருக்கும். பொதுமக்கள் இலவசமாக சுற்றி பார்த்து மகிழலாம் என்று அஞ்சலக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News