உள்ளூர் செய்திகள்

முதல்வர் படத்தை தவறாக சித்தரித்து முகநூலில் பதிவு: பா.ஜனதா நிர்வாகி கைது

Published On 2023-07-18 07:42 IST   |   Update On 2023-07-18 10:02:00 IST
  • திருநெல்வேலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
  • அதிகாலை கைது செய்து திருநெல்வேலிக்கு அழைத்து செல்ல உள்ளனர்

முதல்-அமைச்சர் குறித்து அவதூறு பரப்பிய பா.ஜ.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள கீரப்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ஜெய்குமார் (வயது 32). இவர் அங்குள்ள மளிகை கடையில் வேலைப் பார்த்து வந்தார். மேலும் கடலூர் மேற்கு மாவட்ட பா.ஜ.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகியாகவும் இருந்து வந்தார்.

இவர் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து நெல்லையை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் அங்குள்ள போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமாரை தேடிவந்தனர். அவரை பிடிக்க கடலூர் மாவட்ட போலீசாருடன் இணைந்து செயல்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று இரவு கடலூர் மாவட்டத்துக்கு வந்த நெல்லை போலீசார் உள்ளூர் போலீசாரின் உதவியுடன் சிதம்பரம் உள்ளிட்ட இடங்களில் தேடினார்கள். அப்போது ஜெயக்குமார் கீரப்பாளையத்தில் இருந்தது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் ஜெயக்குமாரை கைது செய்தனர். அவரை நெல்லைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பா.ஜ.க. பிரமுகர் கைது செய்யப்பட்ட சம்பவம் கட்சி நிர்வாகிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News