உள்ளூர் செய்திகள்

முன்னாள் எம்.பி. ராமசுப்பு பொதுமக்களுக்கு பொங்கல், இனிப்பு வழங்கினார்.

ஆலங்குளத்தில் காங்கிரஸ் சார்பில் பொங்கல் விழா

Published On 2023-01-18 12:12 IST   |   Update On 2023-01-18 12:12:00 IST
  • ஆலங்குளம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில், திருவள்ளுவர் தினம், மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
  • விழாவில் மாடுகளுக்கு மாலை அணிவித்து, பூ, பொட்டிட்டு, உணவு வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது.

ஆலங்குளம்:

ஆலங்குளம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில், திருவள்ளுவர் தினம், மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

காமராஜர் சிலை முன் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகரத் தலைவர் வில்லியம் தாமஸ் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. ராமசுப்பு, மாநில கலை இலக்கிய அணி துணைத் தலைவர் ஆலடி சங்கரையா, ஆலங்குளம் தெற்கு வட்டாரத் தலைவர் ரூபன் தேவதாஸ், தென்காசி மாவட்ட துணைத் தலைவர் கண்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

முன்னதாக காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து மாடுகளுக்கு மாலை அணிவித்து, பூ, பொட்டிட்டு, உணவு வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து பொதுமக்களுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் நகர பொதுச் செயலாளர் அருமைநாயகம், ஆலங்குளம் தொகுதி ஆர்.ஜி.பி.ஆர்.எஸ். தலைவர் ஏசுராஜா, நகரப் பொருளாளர் பிரதாப், வேல்குமார் ராமசாமி, செல்லக்கனி, செல்லக்கிளி, மாடக்கண், செல்வம், வேலாயுதம், சுந்தரம், பொன்னுத்துரை, குருவன்கோட்டை கிருஷ்ணன், மாரியப்பன், காமராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முடிவில் நகரச் செயலாளர் லிவிங்ஸ்டன் விமல் நன்றி கூறினார்.

Tags:    

Similar News