உள்ளூர் செய்திகள்

பொங்கல் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்றவர்களை படத்தில் காணலாம்.

திசையன்விளை வி.எஸ்.ஆர்.இன்டர்நேஷனல் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாட்டம்

Published On 2023-01-14 09:27 GMT   |   Update On 2023-01-14 09:27 GMT
  • பொங்கல் விழாவில் நெல்லை மாவட்ட திட்ட துணை அலுவலர் சுமதி, நெல்லை மாவட்ட பஞ்சாயத்து துணைஅலுவலர் அனிதா ஆகியோர் பங்கேற்றனர்.
  • பொங்கல் விழா கொண்டாட்டத்தில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் அரங்கேறியது.

திசையன்விளை:

திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர் நேஷனல் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தி னராக நெல்லை மாவட்ட திட்ட துணை அலுவலர் சுமதி மற்றும் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து துணைஅலுவலர் அனிதா ஆகியோர் பங்கேற்றனர். அனைத்து ஆசிரியர்களும், மாணவர்களும் கலராடை அணிந்து வந்தனர். அதைத்தொடர்ந்து ஆசிரியர்கள் 4 குழுவாகப் பிரிந்து பொங்கலிட்டனர். பள்ளியின் இயக்குனர் சவுமியா ஜெகதீஷ் மற்றும் முதல்வர் எலிசபெத் ஆகியோர் தீ மூட்டி அடுப்புப் பற்ற வைத்தனர். கதிரவனால் விளைந்த நெல், காய்கறிகள், பழங்கள், கரும்பு ஆகியவற்றை கதிரவனுக்கு படைத்து வழிபட்டனர். பல வகையான உணவு வகைகளை படைத்தனர். பொங்கலுக்கு அடிப்படை காரணமாக உழவுக்கும், உழவர்களுக்கும் வந்தனை செய்யும் விதமாக உழவர்கள் பயன்படுத்தும் ஏர் கலப்பை, மாட்டு வண்டி, மண்வெட்டி போன்ற கருவிகளையும் அலங்கரித்து வழிபட்டனர். அதனைத்தொடர்ந்து நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் அரங்கேறியது. ஆசிரியர்களுக்கும் தனிப்போட்டிகள் நடைபெற்றது.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினர் பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார்கள். அனைவருக்கும் பொங்கல் மற்றும் கரும்பு வழங்கப்பட்டது.

Tags:    

Similar News