உள்ளூர் செய்திகள்

நள்ளிரவில் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு- இரவு முழுவதும் ரோந்து பணி மேற்கொள்ள போலீசாருக்கு அறிவுரை

Published On 2023-03-25 15:24 IST   |   Update On 2023-03-25 15:24:00 IST
  • சுமார் 2 மணி நேரம் திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களுக்கு சென்று ஆய்வு செய்தனர்.
  • நிலுவையிலுள்ள மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண உத்தரவிட்டனர்.

திருவள்ளூர்:

கூடுதல் காவல் துறை இயக்குனர் சங்கர், வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணன், காஞ்சி சரக காவல்துறை துணைத் தலைவர் பகலவன் ஆகியோர் திருவள்ளூர் மாவட்டத்தில் திடீரென நள்ளிரவில் ரோந்து பணி சென்று ஆய்வு மேற்கொண்டனர். சுமார் 2 மணி நேரம் திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களுக்கு சென்று ஆய்வு செய்தனர்.

மாவட்டம் முழுவதும் குற்றச்சம்பவங்கள் எதுவும் நடைபெறாத வகையில் இரவில் ரோந்து பணியில் இருக்கும் போலீசார் முறையாக பணி செய்கிறார்களா என ஆய்வு செய்தனர். அப்போது இரவு முழுவதும் விழித்திருந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் போலீசாருக்கு போலீஸ் அதிகாரி அறிவுரை வழங்கினார்கள்.


அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஆய்வு செய்தனர். அப்போது போலீஸ் நிலையத்தில் புகார்கள் மீதான விசாரணை மற்றும் நிலுவையில் உள்ள மனுக்கள் பற்றி கேட்டறிந்து, நிலுவையிலுள்ள மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண உத்தரவிட்டனர்.

இந்த ஆய்வின் போது திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண், உதவி போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தா சுக்கலா, திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News