உள்ளூர் செய்திகள்

கடையநல்லூரில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடந்தபோது எடுத்த படம்.

கடையநல்லூரில் போலீசார் கொடி அணிவகுப்பு

Published On 2022-09-26 14:12 IST   |   Update On 2022-09-26 14:12:00 IST
  • கடையநல்லூரில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
  • 100-க்கும் மேற்பட்ட ஆயுதப்படை போலீசார் மற்றும் கமாண்டோ படை போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

கடையநல்லூர்:

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்து வருகிறது. இதன் காரணமாக தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

இந்த அணிவகுப்பில் புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக் தலைமையில் கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட ஆயுதப்படை போலீசார் மற்றும் கமாண்டோ படை போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். பேரணி கிருஷ்ணாபுரம் அண்ணா சிலையில் தொடங்கி முத்து கிருஷ்ணாபுரம், கிருஷ்ணாபுரம், போலீஸ் நிலைய தெரு, புதூர் பள்ளிக்கூடம் தெரு, பஜார் ரோடு, மதீனா நகர், பேட்டை, ஆஸ்பத்திரி மேற்கு மலம்பாட்டை ரோடு, தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்று கடையநல்லூர் போலீஸ் நிலையத்தில் முடிந்தது. இந்த அணிவகுப்பில் கடையநல்லூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, சப்- இன்ஸ்பெக்டர் கனகராஜன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News