உள்ளூர் செய்திகள்

பணியின்போது செல்போனுக்குத் தடை - காவல் ஆணையர் அதிரடி

Published On 2023-07-03 16:55 GMT   |   Update On 2023-07-03 16:55 GMT
  • பணியில் இருக்கும்போது காவலர்கள் யாரும் செல்போனை பயன்படுத்தக் கூடாது.
  • பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்துவதால், காவலர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படுகிறது.

சென்னை:

சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:

பாதுகாப்புப் பணி மற்றும் சாலைகளில் போக்குவரத்துப் பணியிலிருக்கும் காவலர்கள் பணி நேரத்தில் செல்போனைப் பயன்படுத்துவதால், அவர்களால் பணியை சரியாக செய்யமுடியாதபடி கவனச் சிதறல் ஏற்படுகிறது.

இந்த கவனச் சிதறலால் பல முக்கியப் பணிகளில் தொய்வு ஏற்படுகிறது.

குறிப்பாக, சட்டம்-ஒழுங்கு, பாதுகாப்புப் பணி, முக்கியப் பிரமுகர்கள் பாதுகாப்புப் பணி, கோவில் மற்றும் திருவிழாக்கள் பாதுகாப்புப் பணிகளின்போது கண்டிப்பாக செல்போனைப் பயன்படுத்தக் கூடாது என்பதை நியமிக்கும்போதும், பணியைப் பற்றி விவரிக்கும்போதும் காவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

Tags:    

Similar News