உள்ளூர் செய்திகள்

போச்சம்பள்ளி, கல்லாவி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்

Published On 2022-06-20 15:34 IST   |   Update On 2022-06-20 15:34:00 IST
  • சிப்காட்-போச்சம்பள்ளி, கல்லாவி துணை மின்நிலை யங்களில் நாளை 21-ந்தேதி அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
  • நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி மின்வாரிய செயற்பொறியாளர் உமாராணி வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

போச்சம்பள்ளி கோட்டத்திற்குட்பட்ட சிப்காட்-போச்சம்பள்ளி, கல்லாவி துணை மின்நிலை யங்களில் நாளை 21-ந்தேதி அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதனால் சிப்காட்-போச்சம்பள்ளி துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் செய்யப்படும் கிராமங்கள் மற்றும் கல்லாவி, ஆனந்தூர், திருவனப்பட்டி, கெரிகபள்ளி, காட்டுப்பட்டி, வேடப்பட்டி, சந்திரபட்டி, பணமரத்துப்பட்டி, சூளகரை, ஓலப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

Similar News