உள்ளூர் செய்திகள்

டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம்

Published On 2023-07-03 15:08 IST   |   Update On 2023-07-03 15:08:00 IST
  • டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி புலியரசி பஸ் நிறுத்தம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், பத்பநாபன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

கிருஷ்ணகிரி,

டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி புலியரசி பஸ் நிறுத்தம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட, மேற்கு ஒன்றிய பா.ம.க. சார்பில், கிருஷ்ணகிரி அருகே புலியரசி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை அருகில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி புலியரசி பஸ் நிறுத்தம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், பத்பநாபன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில், பா.ம.க. மாவட்ட செயலாளர் வக்கீல் இளங்கோ, மாவட்டத் தலைவர் தியாகராஜ நாயுடு, வன்னியர் சங்கத் தலைவர் சோமசுந்தரம் நாயுடு ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் வக்கீல் இளங்கோ பேசுகையில், தமிழகத்தில் தி.மு.க. அரசு தேர்தல் நேரத்தில் வாக்குறுதியில் கூறியபடி மதுக்கடைகளை அகற்ற வேண்டும். அனைத்து குற்ற செயல்களுக்கும் காரணமாக இருக்கும் மதுவை அடியோடு ஒழிக்க வேண்டும் என்றார்.

இதில், வன்னியர் சங்க துணைத் தலைவர் வரதராஜன், பொன்னப்பன் உள்ளிட்ட மற்றும் பா.ம.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News