உள்ளூர் செய்திகள்

பா.ம.க.. செயற்குழு கூட்டம் நடைபெற்ற காட்சி.

சங்கரன்கோவிலில் பா.ம.க. மாவட்ட செயற்குழு கூட்டம்

Published On 2022-06-14 10:09 GMT   |   Update On 2022-06-14 10:09 GMT
  • சங்கரன்கோவிலில் உள்ள தனியார் விடுதியில் பா.ம.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
  • சங்கரன்கோவிலில் பழைய பஸ் நிலையத்தை இடித்துவிட்டு புதிதாக பஸ் நிலையம் கட்ட தீர்மானம்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவிலில் உள்ள தனியார் விடுதியில் பா.ம.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தென்காசி வடக்கு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் பால் நேரு, மாநிலத் துணைத் தலைவர் சேது ஹரிஹரன், குருவிகுளம் ஒன்றிய செயலாளர் சுவாமி தாஸ், மேலநீலிதநல்லூர் ஒன்றிய செயலாளர் அமல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சங்கரன்கோவில் நகர தலைவர் கருப்பசாமி வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் சீதாராமன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தீர்மானங்கள் குறித்து பேசினார்.

சங்கரன்கோவிலில் பழைய பஸ் நிலையத்தை இடித்துவிட்டு புதிதாக பஸ் நிலையம் கட்ட வேண்டும், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் புதிய பஸ் நிலையத்தை நிரந்தரமாக செயல்படுத்த வேண்டும். ஒருங்கிணைந்த காய்கறி கடைகள் அனைத்தும் ஊருக்குள்ளே இருக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் குருவிகுளம் ஒன்றிய தலைவர் நடராஜன், மாவட்ட விவசாய சங்கத் தலைவர் மதி ராஜ் மற்றும் தனியார் மில் தொழிலாளி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News