உள்ளூர் செய்திகள்
- கண்டெய்னர் லாரி எந்த வித சிக்னலும் இல்லாமல் லாரியை சாலையில் பிரேக் போட்டு நிறுத்தினார்.
- லாரிக்கு பின்னால் வந்த கணேஷ் லாரியின் மீது மோதி பலத்த காயமடைந்தார்
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள சின்ன எலசகிரி பகுதியை சேர்ந்தவர் கணேஷ் (வயது 33). இவர் பிளம்பர் வேலை செய்து வந்தார்.
சம்பவத்தன்று ஓசூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார்.அப்போது முன்னாள் சென்ற கண்டெய்னர் லாரி எந்த வித சிக்னலும் இல்லாமல் லாரியை சாலையில் பிரேக் போட்டு நிறுத்தினார்.
இந்நிலையில் லாரிக்கு பின்னால் வந்த கணேஷ் லாரியின் மீது மோதி பலத்த காயமடைந்தார். அந்த சாலை வழியாக சென்றவர்கள் கணேசை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவ மனைக்கு செல்லும் வழியிலேயே கணேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.