மனைப்பிரிவு உரிமையாளர்கள் ஆவணங்களை சமர்பித்து பெயர் மாற்றம் செய்யலாம் கலெக்டர் தகவல்
- கலெக்டர் அருண் தம்புராஜ் செய்திக்குறிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.
- மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறி யிருப்பதாவது:- கடலூர் மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி அமைப்புகளில் அமைக்கப்பட்டுள்ள மனைப்பிரிவுகளை தமிழ் நிலம் இணையதள நில பதிவுரு ஆவணங்களில், மனைப்பிரிவுகளை, மனைப்பிரிவு உரிமை யாளர்கள் பெயரில் முன் மாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேற்குறிப்பிட்டுள்ள பணியிணை சிறப்பாக செயல்படுத்திட கடலூர் மாவட்டத்தில் உள்ள மனைப்பிரிவு உரிமை யாளர்கள் தங்கள் வசம் உள்ள மனைப்பிரிவு வரை படங்கள், தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் ஒவ்வொரு மனையினையும் உட்பிரிவு செய்வதற்கான உட்பிரிவு கட்டணம் ஒரு மனைக்கு கிராமபுறம்-ரூ.400, நகராட்சி - ரூ.500, மாநகராட்சி -ரூ. 600 வீதம் மனைப்பிரிவிலுள்ள அனைத்து மனைகளுக்கும் உட்பிரிவு கட்டணம் செலுத்திய ரசீது ஆகியவற்றுடன் வருகிற 13- ந்தேதி காலை 10 மணி முதல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடத்தப் படும் முகாமில் கலந்து கொண்டு ஆவணங்களை சமர்ப்பித்து தங்கள் பெயரில் மாற்றம் செய்து பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.