உள்ளூர் செய்திகள்

பாலக்கோடு பேரூராட்சியில் பதுக்கி வைத்து விற்கப்படும் பிளாஸ்டிக் பைகள்

Published On 2023-09-28 15:41 IST   |   Update On 2023-09-28 15:41:00 IST
  • பிளாஸ்டிக் பைகள் விற்பனை தடுக்க கோரிக்கை சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
  • 10 குடோன்களில் பதுக்கி வைத்திருப்பதாக புகார்

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்,

பேரூராட்சி பகுதிகளில் வணிக நிறுவனங்கள், நடைபாதை வியாபாரிகள் என எப்போதும் பரபரப்பாக காணப்படும் நகரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு சர்வ சாதாரணமாக பொதுமக்கள் மத்தியில் அதிக புழக்கத்தில் உள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது;-

தமிழ்நாடு முழுவதும் 2019 -ம்ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த கூடாது என்று தமிழக அரசு தடை விதித்து உத்தவிட்டுள்ளது.

பிளாஸ்டிக் பயன் பாட்டை கட்டுப்ப டுத்தும் விதமாக மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தின் மூலம் மஞ்சப்பை பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் பாலக்கோடு பேரூராட்சியில் 10 -க்கும் மேற்பட்ட பெரிய குடோன்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரியர் பேக்குகள், தண்ணீர் டம்ளர், தட்டு போன்றவற்றை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

பேரூராட்சி நிர்வாகம் பிளாஸ்டிக்கை கட்டு ப்படுத்து கிறேன் என்ற பெயரில், பெய ரளவில் மட்டுமே வணிக நிறுவனங்கள், நடைபாதை வியாபாரிகளிடம் சொற்ப அளவில் பிளாஸ்டிக்கை பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுப்பது போல் நடந்து கொள்கின்றனர். ஆனால் குடோன்களில் பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்கள் மீது இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

விழிப்புணர்வு என்ற பெயரில் பொது மக்களுக்கும் மாணவர்க ளுக்கும் விளம்பரத்திற்காக பேரூராட்சி நிர்வாகம் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலும் நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Similar News