உள்ளூர் செய்திகள்

களக்காட்டில் பனை மர விதைகள் நடும் பணியை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த போது எடுத்தபடம்.

களக்காட்டில் பனை  மர விதைகள் நடும் பணி- ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

Published On 2022-12-03 09:16 GMT   |   Update On 2022-12-03 09:16 GMT
  • கடம்போடு வாழ்வு நாங்குநேரியான் கால்வாய் கரை பகுதிகளில் நேற்று பனை மர விதைகள் நடப்பட்டது.
  • நாங்குநேரி தொகுதியை செழிப்பாக மாற்ற மரக்கன்றுகளை நடவு செய்வதாக ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

களக்காடு:

நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ. ரூபிமனோகரன் நாங்குநேரி தொகுதியில் 1 லட்சம் பனை மர விதைகள் நடும் பணிகளை தொடங்கி உள்ளார். இதன்படி தினசரி பல்வேறு பகுதிகளில் பனை மர விதைகள் நடவு செய்யப்பட்டு வருகிறது.

ரூபிமனோகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

அந்த வகையில் களக்காடு அருகே உள்ள கடம்போடு வாழ்வு நாங்குநேரியான் கால்வாய் கரை பகுதிகளில் நேற்று பனை மர விதைகள் நடப்பட்டது. ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பனை மர விதைகளை நட்டு, தொடங்கி வைத்தார்.

அதனைதொடர்ந்து களக்காடு செயிண்ட் ஜோசப் கல்வியியல் கல்லூரி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ-மாணவிகளும் பனை மர விதைகளை நட்டனர். அதன் பின்னர் ரூபிமனோகரன் எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

1 லட்சம் பனை விதைகள்

நாங்குநேரி தொகுதியில் பல இடங்களில் வறட்சி காணப்படுகிறது. எனவே நாங்குநேரி தொகுதியில் நிலவும் வறட்சியை நீக்கி, செழிப்பாக மாற்ற மரக்கன்றுகளை நடவு செய்து வருகிறோம். ராகுல்காந்தி பிறந்த நாள் விழாவில் இந்த பணிகளை தொடங்கி உள்ளோம். இதுவரை 50 ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்துள்ளோம். இதன் ஒரு கட்டமாக 1 லட்சம் பனை மர விதைகளையும் நட்டு வருகிறோம்.

தமிழகத்தில் குறிப்பாக தென் மாவட்டங்களில் பனை மரங்கள் ஏராளமாக உள்ளன. பனை மர தொழில் அழிந்து வந்தது. இதனால் கருப்பட்டி உள்ளிட்ட பொருட்களுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டது. தமிழக முதல்-அமைச்சராக ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகு, பனை மர தொழிலை ஊக்குவித்து வருகிறார். இதற்காக பனை மர தொழிலாளர்களுக்கு நல வாரியமும் அமைத்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் முன்னாள் காங்கிரஸ் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், ஜார்ஜ்வில்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News