சம்பளம் வழங்காததை கண்டித்து தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்
- நிா்வாகத்துடன் பலமுறை பேச்சுவாா்த்தை நடத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
- தொழிலாளா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், மேல்கூடலூா் பகுதியில் உள்ள தனியாா் எஸ்டேட் நிா்வாகம் கடந்த 2 ஆண்டுகளாக ஊதியம், போனஸ், வார கூலி உள்ளிட்ட பணப் பலன்களை வழங்கவில்லை. இதுகுறித்து நிா்வாகத்துடன் பலமுறை பேச்சுவாா்த்தை நடத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, ஏஐடியூசி நிா்வாகிகள் தலைமையில் கூடலூா்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் தொழிலாளா்கள் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு வந்த கூடலூா் டி.எஸ்.பி. மகேஷ்குமாா், ஆய்வாளா் அருள் உள்ளிட்டோா் தொழிற்சங்க நிா்வாகிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இது தொடா்பாக நிா்வாகத்திடம் பேச்சுவாா்த்தை நடத்தி முடிவெடுக்கலாம் என்று உறுதியளித்ததைத் தொடா்ந்து, தொழிலாளா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.
தொழிலாளா்களின் போராட்டம் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது