உள்ளூர் செய்திகள்
பிரையண்ட் பூங்காவில் மலர்நாற்று நடும் பணியில் ஈடுபட்டுள்ள தோட்டக்கலைத்துறையினர்.

60-வது மலர் கண்காட்சிக்காக கொடைக்கானலில் ஒரு லட்சம் மலர் நாற்றுகள் நடும் பணி

Published On 2022-11-29 10:04 IST   |   Update On 2022-11-29 10:04:00 IST
  • கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் ஒவ்வொரு ஆண்டும் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.
  • இதற்காக 1200-மலர் படுகைகள் உருவாக்கப்பட்டு பல்வேறு வகைகளைச் சேர்ந்த ஒரு லட்சம் மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டது.

கொடைக்கானல்:

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் ஒவ்வொரு ஆண்டும் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி வருகிற மே மாதம் 60-வது மலர் கண்காட்சி நடத்தப்பட உள்ளது.

இதற்காக பிரையண்ட் பூங்காவில் முதற்கட்டமாக மலர் நாற்று சாகுபடி தொடங்கியது. எதிர்வரும் மலர் கண்காட்சியை காண வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் மலர் நாற்றுகள் நடும் பணியும் தொடங்கி உள்ளது.

இதற்காக 1200-மலர் படுகைகள் உருவாக்கப்பட்டு பல்வேறு வகைகளைச் சேர்ந்த ஒரு லட்சம் மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டது. சால்வியா, டெல்பீனியம்,பிங்க் ஆஸ்டர், வெள்ளை ஆஸ்டர், ஆர் நித்தோகேலம்,பெல் பெர்சியா, லில்லியம், டேலியா போன்ற மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில்கொடைக்கானல் தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் பெருமாள் சாமி,பூங்கா மேலாளர் சிவபாலன் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News