உள்ளூர் செய்திகள்

பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்த பக்தர்கள்.

பிள்ளையார்நத்தம் மகாமுத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குட ஊர்வலம்

Published On 2023-05-10 11:06 IST   |   Update On 2023-05-10 11:06:00 IST
  • பால்குடங்களை சுமந்தவாறு 5 கி.மீ தூரம் ஊர்வலமாக பக்தர்கள் வந்தனர்.
  • மேளதாளம் முழங்க பக்தர்கள் வருகை தந்தபோது ஒருசிலர் அருள்வந்து ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

செம்பட்டி:

திண்டுக்கல் மாவட்டம் பிள்ளையார்நத்தத்தில் மகாமுத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகுசிறப்பாக நடத்த ப்படும். நின்ற நிலையில் உள்ள அம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்து நேர்த்தி க்கடன் செய்ய ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். அதன்படி இந்த வருட திருவிழாவை முன்னிட்டு மகாமுத்து மாரியம்மனுக்கு பாலா பிஷேகம் செய்ய அனுமந்த ராயன்கோட்டை அருகே உள்ள குடகனாற்றுக்கு சென்று அங்கிருந்து பால்குடங்களை சுமந்தவாறு 5 கி.மீ தூரம் ஊர்வலமாக பக்தர்கள் வந்தனர்.

மேளதாளம் முழங்க பக்தர்கள் வருகை தந்தபோது ஒருசிலர் அருள்வந்து ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது. விழா விற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். சிறப்பு அழைப்பாளராக ஆத்தூர் யூனியன் தலைவர் மகேஸ்வரிமுருகேசன் , ஆத்தூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் முருகேசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

Tags:    

Similar News