உள்ளூர் செய்திகள்

தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் புகைப்படக் கண்காட்சி

Published On 2023-07-18 08:15 GMT   |   Update On 2023-07-18 08:15 GMT
  • பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்குபெறும் மாபெரும் பேரணி நடைபெறவுள்ளது.
  • அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட உள்ளது.

தருமபுரி,

"தமிழ்நாடு நாள்" விழாவை முன்னிட்டு இன்று பேரணி மற்றும் சிறப்பு புகைப்படக் கண்காட்சி நடைபெறுகிறது.

இது குறித்து தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளதாவது:-

தமிழ்நாடு நாள் ஜூலை 18 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டு சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொண்டார். விழாவில் தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டது.

நடப்பு ஆண்டில் ஜுலை 18-ம் தேதி இன்று தருமபுரி மாவட்டத்தில் "தமிழ்நாடு நாள்" குறித்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்குபெறும் மாபெரும் பேரணி நடைபெறவுள்ளது. இப்பேரணியில் மாணவ, மாணவியர்கள் தமிழ்நாடு குறித்த சிறப்பை எடுத்துரைக்கும் விதமாக பதாகைகளை ஏந்திச் செல்வார்கள்.

அதேபோன்று "தமிழ்நாடு நாள்" முக்கியத்துவத்தை இளைய தலைமுறையினரும் அறியும் வகையிலும், தமிழ்நாடு நாள் உருவான வரலாறு குறித்த சிறப்புகளை பொதுமக்கள் அறியும் வகையிலும், அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட உள்ளது.

எனவே, மாணவ மாணவியர்கள். பொதுமக்கள் அனைவரும் "தமிழ்நாடு நாள்" நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News