உள்ளூர் செய்திகள்
ஊட்டி ஜெ.எஸ்.எஸ் கல்லூரி சார்பில் பார்மசி தின விழிப்புணர்வு பேரணி
100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி கலந்து கொண்டனர்.
ஊட்டி,
ஊட்டி ஜெ.எஸ்.எஸ் கல்லூரியில் உலக மருந்தாளுநர் தினம் (பார்மசி) விழிப்புணர்வு பேரணி, முதல்வர் எஸ்.பி.தனபால் தலைமையில் நடந்தது. கல்லூரி துணைமுதல்வர் அருண், முதன்மைஅலுவலர் பசவண்ணதேவரு முன்னிலை வகித்தனர். இந்தியன் பார்மசூட்டிகல் அசோசியேசன் நீலகிரி கிளைதலைவர் வடிவேல், செயலாளர் கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கல்லூரி வளாகத்தில் தொடங்கிய பேரணி ரோஜா பூங்கா, கமர்சியல்சாலை, ஏ.டி.சி வழியாக சென்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி கலந்து கொண்டனர்.