உள்ளூர் செய்திகள்

பாரிமுனை கோவிலில் பெட்ரோல் குண்டு வீச்சு: கைதான வியாபாரியை போலீசார் 7 நாட்கள் காவலில் எடுத்தனர்

Published On 2023-11-17 10:15 GMT   |   Update On 2023-11-17 10:15 GMT
  • பெட்ரோல் குண்டை வீசியதாக கைதான முரளி கிருஷ்ணன் வாக்குமூலம் அளித்தார்.
  • போலீசார் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தின் பின்னணியில் வேறு யாரும் இருக்கிறார்களா? என்கிற சந்தேகம் ஏற்பட்டது.

ராயபுரம்:

சென்னை பாரிமுனை கொத்தவால்சாவடி கோவிந்தப்பன் நாயக்கன் தெரு சந்திப்பில் ஸ்ரீ வீரபத்ர சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் மீது கடந்த 10-ந்தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் கொத்தவால் சாவடி போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது சவுகார் பேட்டை ஆதியப்ப நாயக்கன் தெருவை சேர்ந்த வியாபாரி முரளி கிருஷ்ணா என்பவர் பெட்ரோல் குண்டுகளை வீசியது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். பீர்பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி கோவில் மீது அவர் வீசியது தெரியவந்தது. தினமும் சாமி தரிசனம் செய்து வந்த போதிலும் எனக்கு கடவுள் அருள் தரவில்லை என்று கூறி பெட்ரோல் குண்டை வீசியதாக கைதான முரளி கிருஷ்ணன் வாக்குமூலம் அளித்தார்.

இருப்பினும் போலீசார் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தின் பின்னணியில் வேறு யாரும் இருக்கிறார்களா? என்கிற சந்தேகம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து வியாபாரி முரளி கிருஷ்ணனை காவலில் எடுக்க முடிவு செய்தனர். இதன்படி கோர்ட்டில் மனுதாக்கல் செய்து இன்று 7 நாட்கள் காவலில் எடுத்தனர். பெட் ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

"கடவுள் எனக்கு அருள் தரவில்லை. அதனால் பெட்ரோல் குண்டை வீசினேன்" என்று முரளிகிருஷ்ணன் வாக்குமுலம் அளித்திருந்தாலும், வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? என்பது பற்றி விசாரணை நடத்துவதற்காகவே முரளி கிருஷ்ணனை காவலில் எடுத்துள்ளோம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை முடிவில்தான் பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது பற்றிய விவரங்கள் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News