உள்ளூர் செய்திகள்

தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் தாசில்தாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

குடியிருப்பு மனை பட்டா வழங்க வேண்டி மனு

Published On 2023-02-06 08:14 GMT   |   Update On 2023-02-06 08:14 GMT
  • அவர்களுக்கு வீடு கட்ட அனுமதி வழங்க இயலாது.
  • கான்கிரீட் வீடு கட்டுவதற்கு குடியிருப்பு மனை பட்டா வழங்க வேண்டும்.

திருத்துறைப்பூண்டி:

தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், பொருளாளர் ராஜேந்திரன், துணை தலைவர்கள் துரைராஜ், முருகானந்தம், துணை செயலாளர் ராஜ் மோகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஜவகர் மற்றும் சங்கர் ஆகியோர் திருத்துறைப்பூண்டி தாசில்தார் மலர்க்கொடி யிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

சங்கத்தின் 32-வது மாநாடு கடந்த மாதம் 7-ந் தேதி திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது. இதில் குடியிருப்பு மனை பட்டா இல்லாத அனைவருக்கும் அரசு உடன் மனைப்பட்டா வழங்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்த வகையில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் 32 ஊராட்சிகளுக்கும் ஆய்வு செய்ததன் அடிப்படையில் மொத்தம் 2 ஆயிரத்து 305 பேருக்கு அரசு வீடு கட்ட அனுமதி அளித்துள்ளது.

அவர்கள் இருக்கும் இடத்தில் பட்டா இல்லாமல் உள்ளனர்.

ஆகையால் அவர்களுக்கு வீடு கட்ட அனுமதி வழங்க இயலாத என்று அரசு அலுவலர்கள் கூறுகின்றனர். ஆகவே அரசு அவர்களுக்கு மனையும், பட்டாவும் வழங்க வேண்டும்.

கூரை இல்லாத வீடு திட்டத்தை நிறைவேற்றும் வகையில் அனைவருக்கும் கான்கிரீட் வீடு கட்டுவதற்கு குடியிருப்பு மனை பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News