உள்ளூர் செய்திகள்

2-ம் நிலை காவலர்கள் தேர்விற்கான பயிற்சி வகுப்பு

Published On 2023-04-17 12:08 IST   |   Update On 2023-04-17 12:08:00 IST
  • பெரம்பலூர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது
  • கலந்து கொள்ள மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி அழைப்பு

பெரம்பலூர்,

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள 2-ம் நிலை காவலர் (காவல்துறை, தீயணைப்புதுறை மற்றும் சிறைத்துறை) மற்றும் நேரடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் (சட்டம்-ஒழுங்கு, ஆயுதப்படை மற்றும் சிறப்பு காவல்படை) ஆகிய தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் பெரம்பலூர் மாவட்ட இளைஞர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் துறைமங்கலத்தில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிக்காட்டுதல் மையத்தில் நாளை (புதன்கிழமை) முதல் தொடங்கப்படவுள்ளது. இந்த பயிற்சி வகுப்பானது காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை தேர்வில் அனுபவமுள்ள சிறந்த பயிற்சியாளர்களால் நடத்தப்படவுள்ளது. எனவே இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் இருபாலரும் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட போலீஸ் தனிப்பிரிவை 9498100690 என்ற செல்போன் எண்ணிலும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை 9799055913 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம், என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News