உள்ளூர் செய்திகள்

நாட்டார்மங்கலம் கிராமத்தில் பிடிபட்ட நட்சத்திர ஆமை

Published On 2022-10-13 15:00 IST   |   Update On 2022-10-13 15:00:00 IST
  • நாட்டார்மங்கலம் கிராமத்தில் நட்சத்திர ஆமை பிடிபட்டது
  • மலைப்பகுதியையொட்டியுள்ள வயலில் காணப்பட்டது

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே விவசாய நிலத்தில் இருந்த அரியவகை நட்சத்திர ஆமையை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆலத்தூர் அருகே நாட்டார்மங்கலம் கிராமத்தில் மன்னார்கோவில் அருகே மலைப்பகுதியையொட்டி சுந்தரம் என்பவரது விவசாய நிலம் உள்ளது. இன்று காலை சுந்தர மகன் பாவநாசன் தங்களது வயலில் பயிரிட்டுள்ள சம்பங்கி பூ பறித்து கொண்டிருந்தார். அப்போது வாய்க்காலில் அரியவகை நட்சத்திர ஆமை வந்தது. இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் பாலுசாமி மூலம் பெரம்பலூர் மாவட்ட வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் வனக்காப்பாளர் ரோஜாவிடம் பிடிபட்ட அரிய வகை நட்சத்திர ஆமை ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

Similar News