மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது
- மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்
- பெற்றோர்கள் கொடுத்த புகாரின்பேரில் நடவடிக்கை
பெரம்பலூர்:
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன் சத்திரம் தாலுகா, ஜோகிப்பட்டி அஞ்சல் புல்லா கவுண்டனூரை சேர்ந்தவர் பெரியசாமி மகன் செல்வக்குமார் (வயது33). இவர் தற்போது பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் கே.கே. நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர் பெரியம்மாபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் பள்ளி மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்த பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் கொடுத்த தகவலின்பேரில் குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் ராமு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆற்றுப்படுத்துனர் மகேஸ்வரி ஆகியோர் பள்ளிக்கு சென்று பள்ளி மாணவிகளிடம் விசாரணை செய்தனர்.
இதில் ஆங்கில ஆசிரியர் செல்வகுமார் மாணவிகளிடம் தவறான தொடுதலும், தவறான பார்வையும் மற்றும் குறிப்பிட்ட சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தலும் மேற்கொண்டது உண்மை என்பது தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகு நன்னடத்தை அலுவலர் கோபிநாத் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்து அரசு பள்ளி ஆசிரியர் செல்வக்குமாரை கைது செய்து பெரம்பலூர் மாவட்ட மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தினார், வழக்கை விசாரித்த நீதிபதி முத்துகுமரவேல், ஆசிரியர் செல்வக்குமாரை வரும் மார்ச் 9ம்தேதி வரை காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து செல்வக்குமார் பெரம்பலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.